மகாராஷ்டிராவில் ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பாஜக-வில் சேர்ந்துவிட்டார். இது தவிர மும்பை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸிலும், மிலிந்த் தியோரா முதல்வர் ஷிண்டேயின் சிவசேனாவிலும் சேர்ந்து இருக்கின்றனர். அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் மகளையும் பா.ஜ.க தங்களது பக்கம் இழுக்க முயன்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் சேரவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீல் மருமகள் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் பா.ஜ.க வில் சேர்ந்திருக்கிறார். மும்பையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு சென்று அர்ச்சனா தன்னை பா.ஜ.க வில் இணைத்துக்கொண்டார்.
இதில் பா.ஜ.க மாநில தலைவர் சந்திர்சேகர் பவன்குலேயும் கலந்து கொண்டார். தேர்தலுக்கு இன்னும் சில இரண்டு வாரமே இருக்கும் நிலையில் அர்ச்சனா பாட்டீல் பா.ஜ.க வில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ச்சனா ஆரம்பத்தில் சிவராஜ் பாட்டீலுக்கு நெருக்கமான பசவராஜ் முரும்கருடன் பா.ஜ.க வில் சேர திட்டமிட்டார். ஆனால் மகள் திருமணம் காரணமாக அத்திட்டத்தை டாக்டர் அர்ச்சனா ஒத்தி வைத்திருந்தார்.
பா.ஜ.க வில் சேர்ந்த பிறகு அர்ச்சனா பாட்டீல் அளித்த பேட்டியில்,” பெண்களுக்கு சம உரிமையளிக்கும் பிரதமர் மோடியின் நாரி சக்தி வந்தன் ஆதினியாம் திட்டம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவேதான் அரசியல் துறையில் பங்காற்ற பா.ஜ.க வில் இணைந்துள்ளேன்” என்றார்.
லைஃப் கேர் மருத்துவமனையின் தலைவராக இருக்கும் அர்ச்சனாவின் கணவர் சைலேஷ் பாட்டீல் மாநில காங்கிரஸ் செயலாளராக இருக்கிறார். அர்ச்சனா பாட்டீலை தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜ.க விற்கு வரவேற்றார். அவர் மூலம் கட்சி வலுவடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்தார். அர்ச்சனா பா.ஜ.க வில் இணைந்திருப்பதால் லாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY