தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி பிவி நாகரத்னா “ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், 2016-ல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூடத் தெரியாது என்கிறார்கள் […]