ஆம்ஸ்டர்டாம்,
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது.
இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் இருந்தனர். அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக சிறைபிடித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேளிக்கை விடுதிக்குள் எத்தனை பேர் பணய கைதிகளாக உள்ளனர், ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்தது யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.