சென்னை: உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் பண்டிகையை அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுவதை வலியுறுத்தும் திருநாள்என தெரிவித்துள்ளனர்.
புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தியஇயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இன்று (மார்ச் 31) ஈஸ்டர் பண்டிகைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக் கும் உளமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கருணையைப் போற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துகள். நாட்டில்கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் ஈஸ்டர் திருநாளில் சபதம் ஏற்போம். துயர் இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், விடியல் உதிக்கவும் இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழ்க் குலம் உறுதி எடுக்கட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.இயேசு போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின ருக்கு ஆதரவாகவும், பாதுகாப்பு அரணாகவும் செயல்படும்.
பாமக தலைவர் அன்புமணி: உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாளாக ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. இந்நாளில், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அனைத்தும் பெருக அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.