இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரவு வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இருபத்தி ஏழு (27) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி மற்றும் கோட்டாபய நிருவனங்களின் கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வெலிஓய, நிகவெவ பிரதேசத்தில் மேற்கொண்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குறித்த பகுதியில் வைத்து சோதனையிட்டுள்ளார். அங்கு அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், விற்பனைக்கு தயார்படுத்தி காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதின்மூன்று (13) பார்சல்களில் அடைக்கப்பட்ட 27 கிலோ 185 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு பத்து (10) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலிஓய, நிகவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிஓய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.