இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா நாளில் உறுதிபூணுவோம்.
தைரியத்தோடு நன்னோக்கங்களை அடைந்துகொள்வதற்காக மனிதனை பாவத்தில் இருந்து விடுவித்து, சமூக நீதி, அன்பு, கருணை மற்றும் மனித நேயத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் வாழ்வு சிறந்த முன்னுதாரணமாகும்.
எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும், அதற்குத் தேவையான மனநிலையை எம்மிடம் உருவாக்க சமயப் போதனைகள் எமக்கு பெரிதும் உதவுகின்றன.
இது, அன்பையும் கருணையையும் பரப்பிய இயேசுவின் வாழ்க்கைப் போதனைகளின் மூலம் கிடைத்த உயர் விழுமியங்களை மீண்டும் மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டிய காலம். அவற்றின் மூலம் வளம்பெற்று எமது உள்ளங்களை புதியதோர் மாற்றத்தை நோக்கி வழிநடத்தி, அன்புணர்வோடு இந்த உயிர்ப்புப் பெருவிழாவை அலங்கரிப்போம்.