டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே நாடு வளர்ச்சியடைய மோடியும் அவர் சித்தாந்தமும் அகற்றப்பட வேண்டும் என்று உரையாற்றி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், ”இது நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகும். நாமெல்லாம் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க.வை எதிர்கொள்ள முடியும். […]