இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா ஆட்டோவின் சூப்பர்ப் செடான் ரக மாடல் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது.
சூப்பர்ப் காரின் ஆடம்பரமான வசதிகளை பெற்ற டாப் L&K வேரியண்டில் 2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.8 விணாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது.
குறிப்பாக Laurin & Klement வேரியண்டில் இடம்பெற்றுள்ள மற்ற வசதிகளில் குறிப்பாக பின்வருபவை கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.
- ADAS பாதுகாப்பு தொகுப்பில் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வரை செயல்படும் அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
- பார்க்கிங் உதவிக்கு 360 டிகிரி கோணத்தில் காட்சிகளை பெற உதவும் கேமரா
- 9 ஏர்பேக்குகள், அவரசகால பிரேக்கிங் அமைப்பு, டைனமிக் சேஸ் கண்ட்ரோல், ஏக்டிவ் டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் பெற்றுள்ளது.
- அடாப்ட்டிவ் ஆட்டோ எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள் மற்றும் எல்இடி டையில் லைட் பெற்றுள்ளது.
- மற்ற வசதிகளில் வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,11 ஸ்பீக்கர்களுடன் Canton சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு வசதிகள் பெற உள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 100 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய சந்தையில் CBU ( Completely Built-Up) முறையில் கொண்டு வருவதால் ஸ்கோடா சூப்பர்ப் விலை ரூ.55 லட்சத்தில் அமையலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா கேம்ரிக்கு கடும் சவாலினை வழங்க உள்ளது.