பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம்.
5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். ஹேமந்த் சோரன், அர்விந்த் கேஜ்ரிவால் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரங்களை முடக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதே கோரிக்கையை பல தலைவர்களும் வலியுறுத்தினர்.