டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 5,41,087 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது.
மார்ச் 2024 மாதாந்திர விற்பனை 50,297 பயணிகள் வாகனங்களை விற்றது, மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 44,225 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏற்றுமதி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் விற்பனை எண்ணிக்கையில், நாட்டின் முதன்மையான நிறுவனமாக உள்ளது. 23-24 நிதியாண்டில் 3,95,845 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 4 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் விற்பனை எண்ணிக்கை குறித்து பேசிய இந்தியாவில் 2024ஆம் நிதியாண்டில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையில் வலுவான 50 % கூடுதலான எண்ணிக்கை எஸ்யூவி ஆக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், EV மற்றும் சிஎன்ஜி பிரிவுகள் பல புதிய அறிமுகங்கள், வளர்ந்து வரும் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் சிஎன்ஜி நிலையங்கள், கணிசமாக குறைந்தவரும் பயன்பாட்டு செலவுகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக, FY24 vs FY23ல் முறையே 70 சதவிகிதம் மற்றும் 55 சதவிகிதம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தனது அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.