உலக சந்தையில்;; நாணய மாற்று வீதம் மற்றும் பெட்ரோலியத்தின்; விலை ஆகிய இரண்டு முக்கிய காரணிகளால் பெட்ரோலியத்தின் விலை தீர்மானிக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பெற்றோலியத்தின் விலை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் விலைச்சூத்திரம் இன்றி மேற்கொள்ளப்பட்டது போன்று உலக சந்தையில் எரிபொருள்; விலை உயர்வடைந்த போதிலும் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள்; வழங்கப்பட்டமையால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு செய்யப்படவில்லை எனவும், உலக சந்தையில் உள்ள எரிபொருள்; விலைக்கு ஏற்ப நாட்டில் எரிபொருள்; விலை தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பு 400 ரூபாயாக இருந்த நாணய மாற்று விகிதம் தற்போது 300 ரூபாயாகக் குறைந்துள்ளது, இதனால் எரிபொருள்;, எரிவாயு, மருந்து ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன. மேலும் உலக சந்தையில் எரிபொருள்; விலை அதிகரிப்பு அல்லது குறைவினால் இந்நாட்டின் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாகவும், அதனை அரசியல்வாதிகளாலோ அல்லது அரசாங்கத்தினாலோ மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.