இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று (03) 192 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன்படி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக ணுயமசை ர்யளயn 54 ஓட்டங்களையும், ஆழஅiரெட ர்யஙரந 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றினர்.
அதன்படி, முதல் இன்னிங்சில் இலங்கை பங்களாதேஷ் அணிக்கு எதிராக 353 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது இன்னிங்ஸை இடைநிறுத்த தீர்மானித்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மத்தியூஸ் 56 ஓட்டங்களையும், நிஷான் மதுஷங்க 34 ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 511 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, இன்னிங்ஸின் கடைசி நாளான இன்று (03) 318 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது
அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போட்டியின் நாயகனாகவும் கமிந்து மெண்டிஸ் தெரிவானார்.