அமித் ஷாவின் தமிழக சுற்றுப் பயணம் திடீர் ரத்து

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, அமித் ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (ஏப்.4) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உடல்நலக்குறவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயண் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நாளையும், நாளை மறுநாளும் அமித் ஷா கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து அமித் ஷாவின் தமிழக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.