இந்தியாவின் 2023-2024 ஆம் நிதியாண்டில் அதிக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் முதல் இடத்தை மாருதி சுசூகி வேகன் ஆர் எண்ணிக்கை 200,177 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பலேனோ இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 10 மாடல்களில் ஆறு மாடல்களை மாருதி சுசூகி நிறுவனம் கொண்டுள்ளது மீதமுள்ள நான்கு இடங்களில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா இடம்பெற்றுள்ளது.
Top 10 Selling Cars FY23-24
இந்தியாவில் 2023-2024ஆம் ஆண்டில் சுமார் 4,229,566 விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்கள் எண்ணிக்கை பதிவு செய்திருக்கின்றது. இவற்றில் 50.4 சதவீதத்திற்கும் எஸ்யூவி மாடல்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த நிலவரத்தின்படி தற்போது டாப் 10 மாடல்களிலும் எஸ்யூவி மாடல்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே உள்ளது.
எஸ்யூவி சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் 171,697 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பஞ்ச் எஸ்யூவி 170,076 யூனிட்டுகளாக உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசூகி பிரெஸ்ஸா, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ உள்ளது.
டாப் 10 கார்களின் விபரம் பின்வருமாறு ;-
- மாருதி சுசூகி வேகன் ஆர் – 200,177
- மாருதி சுசூகி பலேனோ – 195,607
- மாருதி சுசூகி ஸ்விஃப்ட் – 195,321
- டாடா நெக்ஸான் – 171,697
- டாடா பஞ்ச் – 170,076
- மாருதி சுசூகி பிரெஸ்ஸா – 169,897
- மாருதி சுசூகி டிசையர் – 164,517
- ஹூண்டாய் கிரெட்டா – 161,653
- மாருதி சுசூகி எர்டிகா – 149,757
- மஹிந்திரா ஸ்கார்ப்பியோ – 141,462