சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமது அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மோடி தாரை வார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றிலும், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கச்சத்தீவு குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார்கள். கச்சத்தீவு குறித்து சமீப காலத்துப் பேச்சுகளினால் இலங்கையில் 75 சதவிகித சிங்களர்கள் […]