மும்பை: ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (6.5%) மாற்றமில்லாமல் பழைய வட்டி விகிதமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். இந்த ரெப்போ வட்டி விகிதம் 7-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]