சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.