சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் துவங்கப்பட்ட சூழலில் தற்போது சேனலின் மூன்றாவது முன்னணி தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் திடீர் திருமணங்கள் காரணமாக மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியானது.