கோவை: கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம் காவல்துறையினரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். வேலூர் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வேலூர் இப்ராஹிம் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கோவை தொகுதியில், திமுக […]