கொழும்பு – பதுளை புகையிரதப் பாதை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பயணத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு “ துன்ஹிந்த ஒடிசி சொகுசு சுற்றுலாப் புகையிரதம்” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல பரகுணவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்றது.
கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற பல்சமய ஆசிர்வாத நிகழ்வுகளின் பின்னர் காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த புகையிரதம் பதுளை வரை பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இரண்டாவது சொகுசு ஒடிசி புகையிரதமான துன்ஹிந்த ஒடிசி புகையிரதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கணாத் ரூபசிங்க, புகையிரத இணைப்பாளர் எச். எம். கே. பண்டார உட்பட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் துன்ஹிந்த ஒடிசி புகையிரத முதல் பயணத்தில் கலந்துகொண்டனர்.