ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் ஃபேமிலி பிளான்களும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு பேர் யூஸ் பண்ணிணாலும் ஒரே ஒரு பில் மட்டுமே செலுத்தினால் போதும். இது மட்டுமின்றி, Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய மூன்று ஓடிடிகளின் இலவச சந்தாவைப் உபயோகிக்கலாம். அதிக திரைப்படம், வெப்சீரீஸ் பார்ப்பவர்களுக்கு இந்த பேம்லி பிளான் சூப்பர் ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏர்டெல்லின் இந்த போஸ்ட்பெய்ட் விலை ரூ.1199 ஆகும்.
ஏர்டெல்லின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் பிளான்
ஏர்டெல்லின் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டமானது 1 வழக்கமான மற்றும் 3 இலவச ஆட்-ஆன் இணைப்புகளுடன் வருகிறது. அதாவது நீங்கள் பயன்படுத்த மொத்தம் 4 சிம்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், நான்கு பயனர்களும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பெறுகிறார்கள். டேட்டாவைப் பற்றி நாம் பேசினால், திட்டத்தில் மொத்தம் 240ஜிபி மாதாந்திர தரவு கிடைக்கிறது. இதில் மெயின் கனெக்ஷன் 150ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆன் இணைப்புக்கும் 30ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் டேட்டா ரோல் ஓவர் பிளான்
இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அதிகபட்சமாக 9 ஆட்-ஆன் இணைப்புகளைச் சேர்க்கலாம் ஆனால் ஒவ்வொரு இணைப்புக்கும் கூடுதலாக ரூ.299 செலுத்த வேண்டும்.
ஏர்டெல் ஓடிடி பிளான்கள்
இந்த பிளானில் இருக்கும் OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் திட்டத்தில் பல OTT இயங்குதளங்களுக்கான சப்ஸ்கிரிப்சனை பெறுகிறார்கள். இதில் Netflix அடிப்படையின் மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கான Disney + Hotstar மொபைல் சந்தா ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் ஹேண்ட்செட் பாதுகாப்பு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் வின்க் பிரீமியம் ஆகியவை அடங்கும். மாதத்திற்கு ரூ.300 செலுத்தி Netflix ஹெச்டி குவாலிட்டிக்கும், மாதம் ரூ.450 செலுத்தி Netflix பிரீமியத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே.