மதுரை: சமவேலைக்கு சம ஊதியம் என திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின் அதிருப்தி காரணமாக, சம்பளம் பிடித்தம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 13 நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்களே பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 […]