ஜியோ ஃபைபர் மெகா ஜாக்பாட்! 1000ஜிபி டேட்டா, 15க்கும் மேற்பட்ட OTTகள் 50 நாட்கள் இலவசம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவையான ஜியோ ஏர்ஃபைபர் 136 புதிய நகரங்களை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இது 5352 நகரங்களில் கிடைத்தது. ஆனால் இப்போது 5488 நகரங்களின் பயனர்கள் ஜியோ ஏர் ஃபைபரை பெற்றுக்கொள்ள முடியும். ஜியோ ஏர் ஃபைபர் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நகரங்களை அடைந்துள்ளது என்ற தகவல் வேண்டும் என்றால், ஜியோ இணைய பக்கத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் பெறலாம். ஜியோ ஏர் ஃபைபரின் சிறப்பு என்னவென்றால், ஃபைபர் சேவை இன்னும் எட்டப்படாத பகுதிகளிலுக்கும் சென்றடைந்துள்ளது. அங்கும் தரமான வேகத்தை வழங்குகிறது. அதாவது ஜியோ நிறுவனம் 1Gbps வரை இணைய வேகத்தை வழங்குகிறது.

இப்போது இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மெகா ஜாக்பாட் பரிசு கிடைக்க உள்ளது. அதாவது, பயனர்கள் 50 நாட்களுக்கு இலவச ஜியோ ஏர் ஃபைபர் சேவையைப் பெறுவார்கள். இணையத்தைப் பயன்படுத்தினால் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களின் ஆரம்ப விலை ரூ.599 மட்டுமே. 6மற்றும் 12 மாதங்களுக்கு நீங்கள் சந்தா செலுத்தலாம். இந்த திட்டங்களில், நிறுவனம் 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட OTT பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. அந்தவகையில், ஜியோ ஏர்ஃபைபரின் இரண்டு மலிவான திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜியோ ஏர் ஃபைபர் 599 ரூபாய் பிளான்

ஜியோ ஏர் ஃபைபரின் இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. இதில் இணையத்தைப் பயன்படுத்த 1000 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான சப்ஸ்கிரிப்சனை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் Disney + Hotstar, Sony Liv, Zee5, Jio Cinema மற்றும் Eros Now உட்பட மொத்தம் 11 OTT செயலிகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சனையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

ஜியோ ஏர் ஃபைபர் 899 ரூபாய் பிளான்

ஜியோ ஏர் ஃபைபரின் இந்த திட்டத்தில் 100எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நிறுவனம் 1000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான சப்ஸ்கிரிப்சனை பெறுவீர்கள். இதில், நிறுவனம் Disney+ Hotstar, Sony Liv, ZEE5 மற்றும் Jio Cinema உள்ளிட்ட பல பிரபலமான OTT பயன்பாடுகளுக்கு இலவச சப்ஸ்கிரிப்சனை வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.