சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப். 7)வறண்ட வானிலை நிலவும்.தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரமாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 107டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில்தலா 106, திருச்சி, வேலூர், தருமபுரி, ஈரோட்டில் தலா 105, நாமக்கல், திருத்தணியில் தலா 104, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கத்தில் தலா103, கோவை, தஞ்சாவூரில் தலா 102, பாளையங்கோட்டையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் என 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் வழக்கத்தை விட 5 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதில் வழக்கத்தைவிட 8 டிகிரிக்கு மேல் தருமபுரி, கரூர்மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. அதனால் இவ்விரு மாவட்டங்களில் வெப்ப அலை நிலவியது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.