Chennai Super Kings vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2024 சீசன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மொத உள்ளனர். சென்னை அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக உள்ளது. ஏனெனில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது சென்னை அணி. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையேயான போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருந்தது.
சென்னை அணியில் பெரிய மாற்றங்கள் தேவைப்படவில்லை என்றாலும், அணியில் உள்ள சில குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறியது கடந்த சில போட்டிகளில் தோல்விக்கான காரணமாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திராவின் பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமானது. கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் மந்தமான 118.91 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். மேலும் ரச்சின் பெரிய ரன்கள் அடிக்க தவருகிறார். கடந்த சீசனில் சென்னை அணி வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது.
Back to the den, raring to go again! #WhistlePodu #Yellove pic.twitter.com/9PmDyvUY84
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2024
160.86 ஸ்டிரைக்ரேட்டில் 148 ரன்களுடன் சென்னை அணியின் முக்கியமான வீரராக சிவம் துபே இருந்து வருகிறார். மிடில் ஆர்டரில் சென்னை அணிக்கு ரன்கள் சேர்ப்பதில் இவரது பங்கு முக்கியமானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமீர் ரிஸ்விக்கு பேட்டிங்கில் இன்னும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் முன்கூட்டியே இறக்கிவிடப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மதீஷா பத்திரனா இல்லாததால் சென்னை அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் சௌத்ரி, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோரின் பந்துவீச்சு கடந்த போட்டியில் கைகொடுக்கவில்லை.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முகேஷ் சவுத்திரிக்கு பதிலாக ஷார்துல் தாகூர் களமிறந்த அதிக வாய்ப்புள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் படுபலமாக உள்ளது. அவர்களின் ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை எதிரணியை துவம்சம் செய்கிறது. சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் சென்னை அணியின் பந்துவீச்சை எப்படி அணுகவுள்ளனர் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராமன்தீப் சிங் ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி வரும் அதே வேளையில், ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் பங்களிப்பு கொல்கத்தாவிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மேலும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு அணியை மேலும் பலமாக மாற்றுகிறது.