மட்டக்காப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு வே லைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கிணங்க மாதுளம் பழங்களை சேகரித்து பதப்படுத்தும் நிலையம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் (05) திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது விவசாயிகளின் மாதுளம் பழ விளைச்சலை அதிகரிப்பதற்காக, விவசாயச் சங்கங்கள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் ஆளுநரினால் கையளிக்கப்பட்டன .
இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்