பிரதமர் ‘ரோடு ஷோ’ ஏப். 29 வரை சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை: காவல்துறை உத்தரவு

சென்னை: சென்னை தி.நகரில் நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் ஏப்.9ம் தேதி வருவதையொட்டி, சென்னை பெருநகரில் ஏப். 29 வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வருகிற ஏப்.9 அன்று சென்னை, தி.நகரில் நடைபெறும் ரோடு ஷோ (Road Show)வில் கலந்து கொள்ள சென்னை வருகை தருகிறார். சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144ன் கீழ், சென்னை பெருநகரில் மார்ச் 1 முதல் ஏப். 29 வரை டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர். இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.