மஹிந்திராவின் XUV3XO பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட XUV3XO எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்ளை தற்பொழுது வரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா XUV3XO

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான XUV300 என்ற மாடலை முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மஹிந்திராவின் டிசைன் மொழி பெற்று வரவுள்ள முதல் மாடலாக விளங்க உள்ள எஸ்யூவிக்கு புதிய XUV3XO என்ற பெயரை மஹிந்திரா டீசர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட டிசைன் முன்பாக மஹிந்திரா நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட BE (Born Electric) எலக்ட்ரிக் எஸ்யூவிகளின் தோற்றத்தை தழுவியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், தற்பொழுதுள்ள மாடல்களை விட முற்றிலும் மாறுபட்ட மஹிந்திராவை எதிர்பார்க்கலாம்.

வெளியிடப்பட்ட சமீபத்திய டீசர் மூலம் முகப்பில் இரட்டை பிரிவு கொண்ட புராஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப் உடன் ரன்னிங் விளக்குகள் செங்குத்தாக உள்ளன. பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை வண்ண கலவை அலாய் வீல்கள் கொண்டுள்ளது.

பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் விளக்குகள், எல்இடி லைட்டிங் பாருடன் உள்ளது. புதிய பம்பரில் நெம்பர் பிளேட் கூடுதலாக XUV3X0 பேட்ஜ் பெரிய எழுத்துக்களில் டெயில்கேட் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

XUV3X0 இன்டிரியர் வசதிகள்

எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் இன்டிரியர் வசதிகளை பொறுத்தவரை ஏற்கனவே சந்தையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் உள்ள இன்டிரியரை தழுவியிருப்பது புதிய டீசர் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு வண்ண கலவை பெற உள்ள டேஸ்போர்டில் 10.25 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் 50 க்கும் மேற்பட்ட AdrenoX கனெக்ட்டேட் கார் நுட்பத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். புதிய 10.25-இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவுடன் அகலமான இரட்டை பேன் பனரோமிக் சன்ரூஃப் உடன் வரக்கூடும்.

எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஞ்சின் விபரம்

110hp பவர் பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.  117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இந்த இரு எஞ்சினில் 6 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

131hp பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

மஹிந்திராவின் XUV3XO டீசர்

மஹிந்திரா XUV3X0 விலை எதிர்பார்ப்புகள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பிரசத்தி பெற்ற டாடா நெக்சான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் உட்பட மாருதி ஃபிரான்க்ஸ், புதிய டொயோட்டா டைசர், ஆகியவற்றுடன் குறைந்த விலை ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள Mahindra XUV3XO விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.