CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?

Chennai Super Kings vs Kolkata Knight Riders: இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க சென்னை அணி தயார் ஆகி வருகிறது. இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று சென்னை அணியின் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.  கொல்கத்தா அணி மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பவர்பிளே அமைந்தது. பவர்பிளேயில் சிஎஸ்கேக்கு தேவையான தொடக்கத்தை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் கொடுத்தனர்.  இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு இது உதவியது.  ஆனால் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் சரியாக விளையாடாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.  கேப்டன் கெய்க்வாட் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை இன்னும் சற்று அதிகப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரவீந்திரா பவர்பிளேயில் ரன்களை கொண்டுவர வேண்டும்.  

Knights and Kings! #WhistlePodu #CSKvKKR #Yellove  pic.twitter.com/0heXKOT6rW

— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2024

இந்த சீசனில் சென்னை அணியில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் சிவம் துபே முதல் இடத்தில் உள்ளார். 160.86 ஸ்ட்ரைக் ரேட்டில் 148 ரன்கள் அடித்துள்ளார்.  அதிகம் எதிர்பார்க்கப்படும் இளம் வீரரான சமீர் ரிஸ்விக்கு கூடுதல் பேட்டிங் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய ரிஸ்வி, டெல்லி அணிக்கு எதிராக முதல் பந்திலேயே வெளியேறினார்.  வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மதீஷா பத்திரனா கடந்த போட்டியில் விளையாடவில்லை. இது சிஎஸ்கே அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இன்றைய போட்டியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பத்திரனா பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டு பேரும் இடம் பெறாதபட்சத்தில், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் விளையாடுவார்கள்.  கேகேஆர் அணி மூன்று போட்டிகளில் தொடர் வெற்றியின் மூலம் பலம் வாய்ந்த அணியாக உள்ளது.  ஓப்பனிங்கில் சுனில் நரைன் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு கடினமான நேரத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராமன்தீப் சிங் மிடில் ஆர்டர் விளையாட, ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரசல் மற்றும் வைபவ் அரோரா ஆகியோரின் பங்களிப்பு அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.