புதிய அனுபவத்தை டொயோட்டா டைசர் வழங்குமா..!

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசரின் முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் போட்டியாளர்களை விட எவ்வாறு வேறுபடுகின்றது.

டொயோட்டா-சுசூகி கூட்டணியில் வெளியிடப்படுகின்ற ரீபேட்ஜ் என்ஜினியரிங் கார்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள டைசர், இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் மாடலாகும்.

Toyota Taisor: டிசைன், வசதிகள்

மாருதி ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையான டிசைனை பின்பற்றி வந்துள்ள டைசர் எஸ்யூவி மாடலில் முன்பக்கத்தில் தேன்கூடு கிரில் போன்ற அமைப்பினை கொண்டு பம்பர் பகுதியில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேட்டுடன், பானெட்டின் கீழ்பகுதியில் பகல் நேர ரன்னிங் விளக்குகள் உள்ளது.

பக்கவாட்டில் சிறிய வேறுபாட்டை வழங்கும் நோக்கில் ஃபிரான்க்ஸை விட மாறுபட்ட டிசைன் பெற்ற 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் உள்ளது. பின்புறத்தில் பம்பரில் பெரிதாக மாற்றமில்லை, எல்இடி லைட் பாருடன் கூடிய எல்இடி டெயில் லைட் பெற்றதாக உள்ளது.

toyota-urban-cruiser-taisor-interior

இன்டிரியர் வசதிகளில் இரு மாடல்களும் ஒரே மாதிரியான 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுகின்றது. கூடுதலாக பலரும் விரும்புகின்ற வசதிகளான வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மூலம் சிறப்பான பார்க்கிங் உதவி, கிளஸ்ட்டரை அடிக்கடி பார்ப்பதனை தவிர்க்க ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட வேகத்தை காட்டுவதுடன், ஸ்மார்ட்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜர் வசதி உட்பட பின்பக்க இருக்கைக்கு ஏசி வசதி மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் உள்ளது.

டைசர் பாதுகாப்பு அம்சங்கள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற கார்களில் அடிப்படையாக சேர்க்கப்பட்டு வரும் நிலையில் டொயோட்டா டைசர் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், EBD உடன் ஏபிஎஸ், 3 புள்ளி ELR சீட் பெல்ட், ரியர் வியூ கேமரா, மற்றும் ISOFIX குழந்தைகளுக்கா இருக்கை ஆங்கரேஜ்கள் கொண்டிருக்கின்றது.

toyota-urban-cruiser-taisor-camera

Taisor எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றதாகவும் , கூடுதலாக சிஎன்ஜி என இரண்டு விதமான எரிபொருள் வகையில் கிடைக்கின்றது.  90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வழங்குகின்றது.

  • டைசர் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடலின் எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.7 கிமீ ஆக உள்ளது.
  • ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 22.8 கிமீ ஆகும்.

சிஎன்ஜி பயன்முறையில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோ எரிபொருளுக்கு அதிகபட்சமாக 28.15 கிமீ வழங்குகின்றது.

அடுத்து டாப் வேரியண்டாக அமைந்துள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100hp பவர், மற்றும் 148 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

  • டைசர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடலின் எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.5 கிமீ ஆக உள்ளது.
  • 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.

டொயோட்டாவிடன்  டைசர் வேரியண்ட் மற்றும் நிறங்கள்

டைசர் காரில் 1.2 லிட்டர் எஞ்சின் பெறுகின்ற மாடல் E,  S, S+, S AMT, S+ AMT மற்றும் E CNG ஆகியவற்றுடன் டாப் 1.0 லிட்டரில் G,V V DT, G AT V AT, மற்றும் V AT DT ஆகியவற்றில் கிடைக்கின்றது. DT எனப்படுகின்ற டூயல் டோன் ஆனது சிவப்பு உடன் கருப்பு, சில்வர் உடன் கருப்பு, மற்றும் வெள்ளை உடன் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. மற்ற ஒற்றை வண்ண நிறங்களாக ஆரஞ்ச், வெள்ளை, சில்வர், கிரே மற்றும் சிவப்பு ஆகும்.

டொயோட்டா டைசர் பற்றி கூறுகையில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் உடன் ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்குகின்ற வகையில் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


toyota-urban-cruiser-taisor-colours

Toyota Taisor On-road Price in Tamil Nadu

தமிழ்நாட்டில் டொயொட்டாவின் டைசர் எஸ்யூவி ஆன்-ரோடு விலை ரூ.9.30 லட்சம் முதல் ரூ.16.24 லட்சம் வரை கிடைக்கின்றது.

டைசர் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் ஆன்-ரோடு
 1.2L E ₹ 7,73,500 ₹ 9,30,127
 1.2L S ₹ 8,59,500 ₹ 10,32,190
1.2L S+ ₹ 8,99,500 ₹ 10,78,871
1.2 L S AMT ₹ 9,12,500 ₹ 10,94,921
1.2L S+ AMT ₹ 9,52,500 ₹ 11,43,091
 1.2L E CNG ₹ 8,71,500 ₹ 10,46,801
1.0L Turbo G ₹ 10,55,500 ₹ 13,18,432
 1.0L Turbo V ₹ 11,47,500 ₹ 14,30,110
 1.0L Turbo V DT ₹ 11,63,500 ₹ 14,51,651
 1.0L Turbo G AT ₹ 11,95,500 ₹ 14,89,156
 1.0L Turbo V AT ₹ 12,87,500 ₹ 16,03,654
 1.0L Turbo V AT DT ₹ 13,03,500 ₹ 16,23,765

ஃபிரான்க்ஸ் மாடலை விட டைசரின் 1.2லிட்டர் எஞ்சின் பெறுகின்ற வேரியண்ட் விலை ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை கூடுதலாக உள்ளது.  ஆனால் டர்போ மாடல்களில் விலையை மாற்றமில்லாமல் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளது.

டைசரின் போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல்களான மாருதி ஃபிரான்க்ஸ், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்எஸ்ஓ ஆகியவை உள்ளது.

டொயோட்டா டைசர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.