கியா கிளாவிஸ், கேரன்ஸ் எலக்ட்ரிக் கார்களின் அறிமுக விபரம்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் எலக்ட்ரிக் என இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் நடப்பு ஆண்டில் பிரீமியம் EV9 எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கியா 2024 முதலீட்டாளர் கூட்டத்தில் தலைவர் ஹோ சங் சாங் பேசுகையில், வளரும் சந்தைகளுக்கு ஏற்ற புதிய கியா எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய சந்தைக்கு இரண்டு எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலை சந்தைக்கு வெளியிட உள்ளது.

Kia Carens EV and Clavis EV

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கேரன்ஸ் அடிப்படையில் எலக்ட்ரிக் காரில் 7 இருக்கை எம்பிவி மாடலாக வரவுள்ளது. இதன் மூலம் மிகவும் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுவதனால் மாருதி கொண்டு வரவுள்ள 7 இருக்கை எம்பிவி பெற்றுள்ளது.

கிளாவிஸ் எஸ்யூவி எனப்படுகின்ற காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள கியா நிறுவனம் iCE தவிர எலக்ட்ரிக் வெர்ஷனிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது.  இந்த இரண்டு மாடல்களும் 500 கிலோ மீட்டருக்கு கூடுதலான ரேஞ்ச் வழங்கும் மாடல்களாக 2026 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

வருடாந்திர நிகழ்வில் பேசிய ஹோ சங் சாங், “EV சந்தைக்கு ஏற்ற மாற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கியா ஆறு EV மாடல்களை 2024ல் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டார். 2024ல் வரவிருக்கும் EV3 அதைத் தொடர்ந்து EV2, EV4 மற்றும் EV5 உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் கொரியாவில் வெளியிடப்படும் வளர்ந்து வரும் சந்தைகளில்,  இந்திய சந்தைக்கு Carens EV உட்பட மற்றொரு மாடல் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.