தோனியை வீழ்த்த எங்களிடம் பிளான் இருக்கு.. சென்னை அணிக்கு செக்..? -கம்பீர் உறுதி

ஐபிஎல் 2024, தோனி குறித்து கவுதம் கம்பீர்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 தொடரின் 24வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடத் தயாராகி வரும் நிலையில்,எம்.எஸ்.தோனி குறித்து கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு வீரர்களும் பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் தங்கள் அணிகளுக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், தோனி இன்னும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அதே நேரத்தில் கம்பீர் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக இருக்கிறார். வழக்கமாகவே தோனி குறித்து அவர் பேசும் போதெல்லாம் அது சர்ச்சையாவது வழக்கம். இந்தமுறை தோனி குறித்து கவுதம் கம்பீர் என்ன கூறினார் என்பதைக் குறித்து பார்ப்போம். 

இன்று இரவு சென்னை மற்றும் கொல்கத்தா லீக் போட்டி முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் கவுதம் கம்பீர் தோனியைப் புகழ்ந்து, இந்தியா இதுவரை கண்டிராத வெற்றிகரமான கேப்டன் என்று கூறியுள்ளார். அது தற்போது வைராலாகி வருகிறது. என்னது கவுதம் கம்பீர் வாயில் இருந்து இப்படி ஒரு வாரத்தையா? என நெட்டிசங்கள் ஆர்ச்சரியமடைந்து உள்ளனர் 

அவர் கூறுகையில், “நான் வெற்றி பெற விரும்புக்கிறேன். என் மனதை பொறுத்த வரை நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நாங்கள் நண்பர்கள், எங்களுக்குள் பரஸ்பர மரியாதை எல்லாம் அப்படியே நிலைத்திருக்கும். ஆனால் போட்டி நடக்கும் போது நான் கேகேஆர் கேப்டனாகவும், அவர் சிஎஸ்கே கேப்டனாகவும் தான் செயல்படுவார். அவரைக் கேட்டால், அவரும் இதே பதிலைத்தான் சொல்வார். ஏனென்றால் களத்தில் இருக்கும் போது எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் ஒரு கேப்டனாகவே இருப்பேன். 

நான் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த மிக வெற்றிகரமான கேப்டன். 3 ஐசிசி கோப்பைகளை வென்று தந்தவர். இதன்பின்னரும் வேறு எந்த கேப்டனும் அந்த லெவலை தொடுவார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் அந்த நிலையை அடைய முடியாது என்று நான் நினைக்கவில்லை. அதேநேரத்தில் 3 ஐசிசி கோப்பைகள் வெல்வது என்பது சாதாரணம் அல்ல” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

மேலும், தோனியின் வியூகம், தந்திரம் அணுகுமுறையின் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் தோனியை எதிர்கொள்வதை ரசித்ததாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல்லில், அவரின் ஒவ்வொரு வியூகத்தையும் ரசித்தேன். ஏனென்றால் எம்.எஸ். தோனியின் அந்த வியூக தந்திரத்தின் மனநிலையை நான் அறிந்தேன். அவர் வியூகக்தை அமைப்பதில் மிகவும் கெட்டிக்காரர். சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக களங்களை அமைப்பது எப்படி என்பதை அறிந்தவர். ஒருபோதும் அணியை கைவிடமாட்டார். அவர் நம்பர் 6 அல்லது 7 இல் பேட் செய்தாலும், அவர் களத்தில் இருக்கும் வரை அவரால் ஆட்டத்தை முடிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.

 

 

 
 

 

View this post on Instagram

 

 

 
 
 

 
 

A post shared by Star Sports India (@starsportsindia)

போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் தோனியின் திறனை கம்பீர் பாராட்டினார். அவர்களுக்கு ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும், எம்.எஸ். தோனி களத்தில் இருந்தாலும், கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்.  கடைசி வரை வெற்றிக்காக போராடுவார் என்பதும் தெரியும். அவர்கள் எந்த வகையில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். முடியும். சென்னை அப்படிப்பட்ட ஒரு அணி, கடைசிப் பந்து வீசும் வரை நீங்கள் வெற்றியை பற்றி நினைக்க முடியாது. எனவே சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு வீரருக்கும் சவால் கொடுக்கும் வகையில் எங்கள் அணியிலும் பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் அவரை விடவும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். அவரை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தோனியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் என கவுதம் கம்பீர் கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.