யமஹா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான புதிய MT-15 V2 பைக்கில் கூடுதலாக இரண்டு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 6 நிறங்களுடன் தற்பொழுது வந்துள்ள இரு நிறங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 நிறங்களை கொண்டுள்ளது.
எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக் மாடலில் தொடர்ந்து 155cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு இயந்திரம் 10,000ஆர்பிஎம்மில் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2024 Yamaha MT-15 V2
இந்த பைக் மாடலில் சியான் ஸ்ட்ரோம் DLX, சைபர் க்ரீன் DLX என இரு நிறங்களுடன் முந்தைய நிறங்களான மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், ரேசிங் ப்ளூ, Ice Fluo-Vermillion, மோட்டோ ஜிபி எடிசன், மற்றும் மெட்டாலிக் பிளாக் DLX ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.
தங்க நிறத்தில் கொடுக்கப்பட்டு 37mm அப்சைடு டவுன் ஃபோர்க்கினை பெறுகிறது. கொண்டுள்ள நிலையில். மோனோ ஷாக் அப்சார்பருடன் MT-15ல் பாக்ஸ் செக்ஷன் ஸ்விங்கிராம் பெற்றுள்ளது.
- யமஹா MT-15 V2 – ₹ 1,69,539
- யமஹா MT-15 V2 – ₹ 1,74,239 (CYAN STORM DLX, CYBER GREEN DLX, METALLIC BLACK DLX, )
- யமஹா MT-15 V2 – ₹ 1,75,039 (Motogp)
(ex-showroom Tamil Nadu)