புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் 18 திகதி மலரும் தேசிய மரநடுகை சுபநேரத்தில் (காலை 6.16) உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (08.04.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
14. ‘சுப நேரத்தில் ஒரு மரம்’ – தேசிய மரநடுகைத் திட்டம்
2024 ஆண்டுக்குரிய புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் மாதம் 18 திகதி முற்பகல் 6.16 மணிக்கு தேசிய மரநடுகை சுபநேரம் மலர்கின்றது. குறித்த சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் அல்லது உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்காக மக்களை தெளிவுபடுத்தவதற்கும், அதற்கான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரரல் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.