அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்., சைதாப்பேட்டை, சென்னை சென்னையில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் சைதாப்பேட்டை என்னும் ஊர் உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர், சிம்ம முகம் இல்லாமல் சாந்தமான முகத்துடன் இருக்கிறார். எனவே இவர் ‘அழகிய சிங்கர்” என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஆனந்த விமானம் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. கோயில் முன்மண்டபத்தில் உள்ள ராமர் சன்னதி தெற்கு நோக்கியிருக்கிறது. மூலவர் ராமரின் வலப்புறம் சீதை, இடப்புறம்; லட்சுமணருடன் திருமண கோலத்திலும்.. உற்சவரின் வலப்புறம் லட்சுமணர், இடப்புறம்; சீதையுடன் பட்டாபிஷேக கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் இங்கு ராமபிரானின் இரண்டு கோலங்களைத் […]