குஜராத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கடந்த மாதம் 22ம் தேதி `ராஜ்புத்ர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு, `ராஜபுத் ஆட்சியாளர்கள் தங்களது வீட்டு பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ராஜபுத் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தான் தெரிவித்த கருத்துக்கு ரூபாலா மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் பிரச்னை அடங்கவில்லை. ரூபாலா வரும் மக்களவைத் தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். சர்ச்சைக்குறிய வகையில் பேசிய ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க வேட்பாளரை மாற்றவேண்டும் என்று ராஜபுத் சமுதாய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 6-ம் தேதி ராஷ்ட்ரீய சமுதாய தலைவர்கள் அகமதாபாத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ராஜபுத் சமுதாய பெண்கள் ஐந்து பேர் காந்திநகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு வெளியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருந்தனர். அவர்கள் பா.ஜ.க அலுவலகத்திற்கு வரும் முன்பு அப்பெண்களை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்தனர். காந்திநகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்துவதற்காக ராஷ்ட்ரீய கர்னி சேனா தலைவர் ராஜ் ஷெகாவத் அகமதாபாத்திற்கு விமானம் மூலம் வந்தார்.
அவரை போலீஸார் விமான நிலையத்திலேயே கைது செய்தனர். ஆனாலும் ராஜபுத் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் பா.ஜ.கவினர் பிரசாரம் செய்ய வரக்கூடாது என்று நோட்டீஸ் வைத்துள்ளனர். ரூபாலாவின் கருத்து குறித்து மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டீல் அளித்த பேட்டியில், ”தவறு நடந்து விட்டது. அதற்காக அந்த சமுதாயத்திடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே நடந்த சம்பவத்திற்காக மூன்று முறை மன்னிப்பு கேட்டுவிட்டோம். எனவே ராஷ்ட்ரீய சமுதாய தலைவர்கள் கோபத்தை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ராஜ்கோட் தொகுதி வேட்பாளரை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாஜபுத்திரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY