'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார்.

ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது ‘ஹிக்ஸ் போசன்’ துகள் என்றும் ‘கடவுள் துகள்’ என கூறப்பட்டது. இதற்காக பீட்டர் ஹிக்ஸ் 2013-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்த ஆராய்ச்சி பல்வேறு கேள்விகளுக்கான விடை தந்தது. எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் முதுமை காரணமாக பீட்டர் ஹிக்ஸ் எடின்பெர்க்கில் உள்ள தனது வீட்டில் இறந்தார். அவருடைய மறைவுக்கு நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.