நியூயார்க்: இந்திய அரசு மின்வாகனங்களுக்கு குறைந்த இறக்குமதி வரிகளை வழங்கும் புதிய மின்வாகன கொள்கையை அறிவித்தது.
குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தியாவில் மின்வாகன உற்பத்தி அலைகளைத் திறக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை தரப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லாபோன்ற வாகன உற்பத்தியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதனிடையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் சந்தித்தார். அந்த சந்திப்பில் மோடியிடம், 2024-ம் ஆண்டில் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வரும் ஏப்ரல் 22-ம் தேதி எலான் மஸ்க் இந்தியா வர உள்ளார். அப்போது அவர்பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறார். எலான் மஸ்க் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளும் டெஸ்லா நிறுவனத்துக்கான ஆலைகளை அமைக்கும் இடங்களை ஆய்வு செய்ய இந்தியா வர உள்ளனர்.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பைஎதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.