பாலிவுட் நட்சத்திரங்கள் நேற்று மும்பையில் ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடினர். நடிகர் ஆமீர் கான் தனது இரண்டு மகன்களுடன் வீட்டிற்கு வெளியில் வந்து கூடியிருந்த ரசிகர்களுடன் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வசிக்கிறார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜானுக்கு ரசிகர்களை சந்திப்பது வழக்கம். எனவே இந்த ஆண்டும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நேற்று காலையில் இருந்து சல்மான் கான் வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். மும்பை மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் சல்மான் கானை பார்க்க வந்திருந்தனர். ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
அதோடு சல்மான் கான் வீடு இருந்த ரோட்டில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றால் உடனே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜானையொட்டி சல்மான் கான் படம் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுதான் சல்மான் கானின் படம் வெளியாகவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் படத்தின் பெயரை சல்மான் கான் அறிவித்தார். தமிழ் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிகந்தர் என்ற படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று சல்மான் கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். படத்தை சாஜித் நாடியாவாலா தயாரிக்கிறார். படத்தின் ஹிரோயின் உட்பட இதர நடிகர்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். சல்மான் கான் தயாரிப்பாளர் கரண் ஜோகருடன் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY