இந்தியாவின் ஸ்போர்ட் பைக் சந்தையில் மிகச் சிறப்பான பெயரை பெற்றுள்ள பஜாஜ் பல்சர் வரிசையில் இடம் பெற்றுள்ள பல்சர் N250 பைக்கின் சிறப்பு ரைடிங் பார்வை பற்றி தற்பொழுது விரிவாக தொகுத்து வழங்கியுள்ளேன்.
Pulsar N250: டிசைன் மற்றும் நிறங்கள்
டிசைன் மாற்றங்களை பொறுத்த வரை சொல்ல வேண்டும் என்றால் அடிப்படையான கட்டுமானத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தவில்லை .முந்தைய மாடல் போலவே அமைந்திருந்தாலும், கவர்ச்சிகரமான புதிய நிறங்கள் மற்றும் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் சிறப்பான ஒரு மேம்பாடாக கருதப்படுகின்றது
குறிப்பாக, பாடி கிராபிக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள நேர்த்தியான நுணுக்கங்கள் இந்த பைக்குக்கு ஒரு நல்ல வரவேற்பினையும் பார்வைக்கு ஒரு குளுமையான தோற்றத்தை வழங்குவதால் இளைய தலைமுறையினருக்கு மிகவும் ஒரு கவர்ச்சிகரமான மாடல் என்பதை மீண்டும் ஒருமுறை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் N250 மூலம் நிரூபித்துள்ளது.
வெள்ளை சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்கள் ஆனது இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது குறிப்பாக வெள்ளை மற்றும் சிவப்பு பைக்குகளில் கோல்டன் நிறத்திலான அப்சைட் டவுன் போர்க்கானது இடம்பெற்று இருக்கின்றது. அதற்கு உண்டான நேர்த்தியான கிராபிக்ஸும் N250 பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கருப்பு நிறம் மாறலில் வெப்சைட் டோன் போர்க்கானது கருமை நிறத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு கருப்பு நிறம் ஆனது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புதிய 2024 மாடலில் குறிப்பாக எஞ்சின் கவரில் கண் மெட்டல் ஃபினிஷ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது
2024 பல்சர் என்250 புதிய வசதிகள்
பல்சர் என்250 பைக்கை பொருத்தவரை மேம்பட்ட புதிய சஸ்பென்ஷன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் ஒரு முக்கியமான மேம்பாடாக உள்ளது.
அடுத்தபடியாக, டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது எல்சிடி முறையில் கொடுக்கப்பட்டு இந்த கிளஸ்டர் ஏற்கனவே விற்பனைக்கு வந்த என்150 மற்றும் என்160 பைக்குகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிளஸ்டரில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஸ்மார்ட்போன் மூலம் இணைப்பினை ஏற்படுவதால் பல்வேறு ஸ்மார்ட் போன் அணுகல்களையும் பெற முடிகிறது.
அடுத்து மிக முக்கியமான வசதியானது ஏபிஎஸ் மோட் கொடுக்கப்பட்டிருக்கின்றது தற்பொழுது மூன்று விதமான (Road, Rain and Offroad) ஏபிஎஸ் மோடுகள் இடம் பெற்று இருக்கின்றன. கூடுதலாக, டயரின் அகலம் 10 மிமீ வரை அதிகரித்திருப்பதுடன், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமானது வழங்கப்பட்டிருக்கின்றது.
Pulsar N250 ரைடிங் செயல்பாடு
பஜாஜ் பல்சர் N250 பைக் நான் ஓட்டி பார்த்தவரை மிக நேர்த்தியான ஒரு கையாளுதலை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அதேபோல இன்ஜின் செயல்திறனில் பவர் ட்ராக் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தவில்லை தொடர்ந்து முந்தைய இன்ஜினை போலவே இருக்கின்றது. இருந்தாலும் கூடுதலாக இரண்டு கிலோ வரை பைக்கின் எடை அதிகரிக்கப்பட்டுள்ளது.
249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிட்டி ரைடுகளுக்கு ஏற்ற வகையில் இந்த மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது குறிப்பாக கார்னரிங் கையாளுமை, பிரேக்கிங் முறையில் டூயட் சேனல் ஏபிஎஸ் உடன் ஏபிஎஸ் மோடுகள் நல்ல ஒரு சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்துகின்றது. சுவிட்சபிள் ட்ராக்சன் கண்ட்ரோலும் நல்ல ஒரு அமைப்பின் மூலம் பைக்குக்கு நிலைத் தடுமாறுவது பெரும்பாலும் தடுக்கப்படுகின்றது.
2024 Bajaj Pulsar N250 வாங்கலாமா.?
ஸ்போர்ட்டிவான பெர்பார்மன்ஸ், சிறப்பான கையாளுமை கொண்டு பணத்திற்கு ஏற்ற மதிப்பு கொண்டுள்ள பைக் ரூ.1.51 லட்சம் பட்ஜெட் விலையில் அமைந்திருக்கின்றது. டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஏபிஎஸ் மோடு, டிராக்ஷன் கண்ட்ரோல், யூஎஸ்டி ஃபோர்க் வசதிகள் என அனைத்தும் பல்சர் N250 பைக்கிற்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது.
பல்சர் N250 மாடலுக்கு போட்டியாக கேடிஎம் 250 டியூக், சுசூகி ஜிக்ஸர் 250 உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் பஜாஜ் பல்சர் N250 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.1,82,654
2024 பஜாஜ் பல்சர் N250 புகைப்படங்கள்
This News 2024 பஜாஜ் பல்சர் N250 சிறப்புகள், விலை மற்றும் விமர்சனம் appeared first on Automobile Tamilan.