'ஜெயிலர்' இரண்டாம் பாகத்திற்கு தலைப்பு வச்சிட்டாங்களா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் கடந்த படம் 'ஜெயிலர்'.
இப்படத்தின் மாபெரும் வெற்றியால் இரண்டாம் பாகமும் தயாராகலாம் என்று சொல்லப்பட்டது. ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜுன் மாதம் ஆரம்பமாகலாம்.
அதற்குப் பிறகு ரஜினியின் 172வது படமாக 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கதை எழுதும் வேலைகளில் நெல்சன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். படத்திற்கு 'ஜெயிலர் 2' எனப் பெயர் வைக்காமல் 'ஹுக்கும்' என தலைப்பு கூட வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'ஜெயிலர்' படத்தில் 'டைகர் கா ஹுக்கும்' என்ற பாடல் பிரபலமானதால் அந்தப் பெயராம்.