பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரெயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக மைசூரு- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16022) இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கிழக்கு, ெபங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையங்கள் வழியாக செல்வதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும்.
இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) இன்று, நாளை மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தை வந்தடையும். அதாவது பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.