ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள 2kwh வேரியண்ட் ரூ.69,999, 3kwh வேரியண்ட் ரூ.84,999 மற்றும் 4kwh வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் நோக்கில் விலை குறைத்து வெளியிடப்பட்டுள்ள ஓலா S1X, S1 Air மற்றும் S1 Pro விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 190 கிமீ ரேன்ஜ் வழங்குகின்ற ஓலா S1X 4kwh மாடல் விலை ரூ.99,999 ஆக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற ஓலா S1X இ-ஸ்கூட்டரின் பேட்டரி வகைகள் பின் வருமாறு;-
- டாப் 4kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 150-160 கிமீ வழங்கலாம்.
- 3kwh பேட்டரி பேக் கொண்ட எஸ்1 எக்ஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 143 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 110-120 கிமீ வழங்கலாம்.
- 2kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 70-80 கிமீ வழங்கும் நிலையில் இந்த வேரியண்ட் டாப் ஸ்பீடு 85 கிமீ ஆக உள்ளது.
ஓலா S1X ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோடு, ஆப் ஆதரவுடன் கூடிய கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 34 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் வசதியுடன் அமைந்துள்ள ஸ்கூட்டர் டெலிவரி அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது.
- ஓலா S1 ஏர் விலை ரூ.1.05 லட்சம்
- S1 Pro ரூ.1.30 லட்சம்
ஓலாவின் அனைத்து இ-ஸ்கூட்டர்களுக்கும் 8 வருட வாரண்டியுடன் மற்றும் 80,000 கிமீ வரை கிடைக்கும்.