ரேவா: மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள மணிகா கிராமத்தில், 70 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, பயன்படுத்தப் படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை, 6 வயது சிறுவன் தவறி விழுந்து, 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டான். உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணியளவில் சிறுவன் இருக்கும் இடத்தை மீட்பு கருவிகள் நெருங்கின. ஆனால், சிறுவன் உயிரோடு இல்லை. அவனது உடல்மட்டுமே மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆழ்துளைை கிணறு குறுகலாக இருந்ததால், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் பிரதீபா பால் தெரிவித்தார்.