இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!

இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய பணக்கார லீக் கிரிக்கெட் போட்டியாகும்.  மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கூட ஐபிஎல் அணியில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக்கிற்கு (NFL) இணையாக பலரும் ஐபிஎல் போட்டிகளை உலகம் முழுவதில் இருந்து பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இதன் ஒளிபரப்பு உரிமை பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் பிரத்யேக பதிப்புரிமை இருக்கும். இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து ஐபிஎல் வர்ணனையாளர்கள், ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இனி மைதானத்தில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையைப் பெற அதிக தொகையை செலுத்திய ஒளிபரப்பு உரிமைதாரர்கள் எடுப்பதால் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் போட்டியின் புகைப்படத்தை அவரது சமூக ஊடகங்களில் வெளியிட்டதை தொடர்ந்து பிசிசிஐ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சமீபத்தில் ஒரு வர்ணனையாளர் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து  இன்ஸ்டாகிராம் லைவ் மேற்கொண்டார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்தது. ஏற்கவே ஐபிஎல் போட்டியின் வீடியோ கிளிப்பை வெளியிட்டதால் ஒரு ஐபிஎல் அணிக்கு ரூ 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

The BCCI has informed all commentators, players, IPL owners, and social media and content teams associated with the squads not to post any pictures or videos from the stadium on match days on social media (IE) pic.twitter.com/zcHMtFf3uM

— Vipin Tiwari (@Vipintiwari952_) April 15, 2024

மைதானத்தில் இருந்து இவ்வாறு செய்வது விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.  ஐபிஎல் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனமும், டிஜிட்டலுக்கான உரிமையை ஜியோ சினிமாஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. அவர்கள் மட்டுமே போட்டியின் வீடியோக்களை இணையத்தில் வெளியிட உரிமை உள்ளது. இந்த விதிகள் ஐபிஎல் அணிகளுக்கும் பொருந்தும். அவர்கள் போட்டியின் வீடியோவை கிளிப்பைப் பகிர முடியாது என்றாலும், மைதானத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

“ஒளிபரப்பாளர்கள் ஐபிஎல் உரிமையை பெற அதிக பணம் செலுத்தியுள்ளனர். எனவே வர்ணனையாளர்கள் போட்டி நாளில் வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட கூடாது. போட்டி நடைபெறும் நாட்களில் சமூக ஊடக பதிவுகளில் கவனத்தில் கொள்ளுமாறு வீரர்களுக்கும் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் அனைத்து பதிவுகளும் கண்காணிக்கப்படுகின்றன. விதிகள் குறித்து அவர்களுக்குத் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்களில் சிலர் அதைப் பின்பற்றவில்லை. வர்ணனையாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் போட்டியை காண்பித்துள்ளார். அந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றது. இதனால் பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.