இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா (Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 புரோ என இரு மாடல்களின் 2024 ஆம் ஆண்டிற்கான பேட்டரி, ரேஞ்ச், சிறப்பு அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்வோம்.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் வீடா வி1 பிளஸ் மற்றும் வீடா வி1 புரோ என இரு மாடல்களின் சிறப்புகள் பொதுவாக ஒரே மாதிரியாக அமைந்துள்ளன சிறிய வித்தியாசங்களும் பின் வருமாறு;-
Vida V1 Plus & V1 Pro
சமீபத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வீடா வி1 பிளஸ் மற்றும் வீடா வி1 ப்ரோ என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீக்கும் வகையிலான பேட்டரி பொருத்தப்பட்டு மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்றிருப்பதனால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருகின்றது. குறிப்பாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆரஞ்ச், சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் வெள்ளை என 5 விதமான நிறங்களை கொண்டுள்ளது.
எல்இடி விளக்குகளை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர்களில் 7 அங்குல TFT தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை பெறும் வகையில் மிக நேர்த்தியாக வெயில் நேரங்களிலும் பார்வைக்கு தெளிவாக உள்ளது.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது இணைக்கப்பட்டிருக்கின்றது. 1301 மிமீ வில் பேஸ் கொண்டு 155 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 780 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டிருக்கின்றது. இரு பக்க டயர்களிலும் 12 அங்குல அலாய் வீல் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது.
கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், திருட்டை தடுக்கும் அலாரம், ஜியோ ஃபென்ஸ் வசதி, வாகனத்தின் பழுதுகளை அறியும் வசதி, எஸ்.ஓ.எஸ் அலர்ட் கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல், 2 வே திராட்டில் ரீஜெனரேசன் முறை மற்றும் இன்கமிங் கால் அலர்ட் போன்றவை எல்லாம் கிடைக்கின்றன.
Vida V1 Plus vs V1 Pro
இரண்டு வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களுக்கும் வித்தியாசம் என்பது பேட்டரி மற்றும் ரேஞ்ச் உட்பட ரைடிங் மோடுகளில் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றன.
வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் V1 பிளஸ் மாடல் 3.44kWh பேட்டரியை பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 95-100 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, Vida V1 Pro மாடல் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 110-120 கிமீ வரை கிடைக்கும்.
இரண்டு வகைகளும் ஒரே PMSM மின்சார மோட்டாரைப் பெறுகின்றது. பொதுவாக இரு மாடல்களும் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-80 சதவீத சார்ஜிங் செய்ய 65 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.
Vida Escooter | Vida V1 Plus | Vida V1 Pro |
---|---|---|
Price | ₹1,19,900 | ₹1,49,900 |
பேட்டரி திறன் | 3.44 kWh | 3.94 kWh |
IDC ரேஞ்ச் | 143 km | 165 km |
ரைடிங் ரேஞ்ச் | 95-100 km | 110-120 km |
அதிகபட்ச வேகம் | 80km/h | 80km/h |
பவர் | 3.9 kW | 3.9 kW |
டார்க் | 25Nm | 25Nm |
Acceleration | 0-40 km/h in 3.4 seconds | 0-40 km/h in 3.2 seconds |
சார்ஜிங் நேரம் | 0-80% பெற 5 மணி 15 நிமிடங்கள் | 0-80% பெற 5 மணி 55 நிமிடங்கள் |
ரைடிங் மோடு | ECO, Ride, Sport | ECO, Ride, Sport & Custom |
குறிப்பாக வீடா மாடலில் வழங்கப்பட்டுள்ள ஈக்கோ மோடில் மணிக்கு 50 கிமீ வரையும், ரைட் மோடில் மணிக்கு 60 கிமீ மற்றும் ஸ்போர்ட் மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ எட்டுகின்றது. கூடுதலாக உள்ள பார்க்கிங் உதவி வழங்குகின்ற ரிவர்ஸ் மோடில் மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
125 கிலோ எடையுள்ள விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள க்ரூஸ் கண்ட்ரோல் மோடில் மணிக்கு 30 கிமீ முதல் 60 கிமீ வரைக்கும் இடையில் பயன்படுத்திக் கொள்ளலாம். க்ரூஸ் மோடில் இருந்து வெளியேற திராட்டிளை குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ அல்லது பிரேக் பயன்படுத்துவதுடன் கூடுதலாக க்ரூஸ் பட்டனை பயன்படுத்தினால் போதுமானதாகும்.
விடா வாரண்டி
விடா வி1 ப்ரோ மற்றும் வி1 பிளஸ் என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ, வாகனத்திற்கு 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வழங்கப்படுகின்றது.
Hero Vida V1 on road price in Tamil Nadu
ஹீரோ வீடா வி1 ப்ரோ மற்றும் வி1 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எவ்விதமான வாகனப் பதிவு கட்டணமும் தமிழ்நாட்டில் வசூலிக்கப்படுவதில்லை, எனவே விடா வி1 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.29 லட்சத்தில் துவங்குகின்றது. சமீபத்தில் நடைமுறைக்கு வந்த EMPS 2024 விதிமுறைகளுக்கு உட்பட்டு விலை வழங்கப்பட்டுள்ளது.
- Vida V1 Pro – ₹ 1,29,065
- Vida V1 Plus – ₹ 1,58,934