தோனி தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரகசியம் இதுதான்- ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் சிஎஸ்கே கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரே அந்த அணியின் அடையாளமாக இருப்பதாக கூறியிருக்கும் ஷர்துல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை அடித்ததும் ஒட்டுமொத்த சிஎஸ்கே கூடாரமும் பிரம்மித்துப்போனதாகவும் தெரிவித்துள்ளார். 

எம்எஸ் தோனி அதிரடி ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே 206 ரன்கள் குவிக்க மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு தோனி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக அடித்த மூன்று சிக்சர்களே டர்னிங் பாயிண்டாக அமைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் ஆக்ரோஷமான பேட்டிங்கை வான்கடே மைதானத்தில் பார்க்க முடிந்தது. களத்துக்கு வந்த முதல் மூன்று பந்துகளையும் அவர் சிக்சருக்கு பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்கள் எடுக்கும் என நினைத்திருந்த நேரத்தில் மும்பை அணிக்கு டார்கெட்டாக 206 ரன்களை செட் செய்தார் தோனி. இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஷர்துல் தாக்கூர் புகழாரம் 

தோனியின் பேட்டிங் குறித்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் புகழ்ந்து பேசியுள்ளார். எம்எஸ் தோனி மூன்று சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்ததும் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் பிரம்மித்துப்போனதாக தெரிவித்துள்ள அவர், மஹி பாய்க்கு இருக்கும் வலிமையால் அவரால் உலகின் எந்த பவுலருக்கு எதிராகவும் அதிரடியாக ஆட முடியும் என தெரிவித்துள்ளார். தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாதது என்றும் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் இவ்வளவு பெரிய ஆதரவு காரணமாக மஹி பாய் தொட்டதெல்லாம் தங்கமாக மாறுவதாகவும் ஷர்துல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டாப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல டாப் கிளாஸ் ஆட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கச்சிதமான பிளேயர்களை கொண்டிருக்கும் அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியிருக்கும் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடக்க உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.