யாழ் சமூக செயற்பாட்டு மையம்(JSAC) நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது.
மாற்று வலு உடையவர்களின் கல்வி ஊக்குவிப்பை மையப்படுத்தியதாக இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று வருட காலப்பகுதியை உள்ளடக்கிய இத் திட்டத்திற்கு 83 மில்லியன் செலவிடப்படவுள்ளது.
இதன்போது யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) திட்ட முகாமையாளர் குறித்த திட்டம் தொடர்பாக திட்டத்துடன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு விளக்கமளித்தார்.
துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த திட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.