கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனது வாக்கினை செலுத்திய பிறகு, செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது, கோவை தொகுதியில் பாஜக வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததாக யாரேனும் நிரூபித்தால் அடுத்த நிமிடமே அரசியலை விட்டு விலகுவதாக கூறியவர், திமுகவினர் பணத்தை கொண்டுகோவையை வெல்ல முயற்சித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். 18-வது பாராளுமன்றம் அமைப்பதற்கான மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் […]