சென்னை: தமிழக எம்.பி.கள், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில், மத்திய சென்னை மற்றும் வேலூர் தொகுதி எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எதுவும் செலவிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியான ரூ.367கோடி நிதியில், வெறும் ரூ.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.274 கோடி செலவிடப்படவில்லை. […]